வைரமுத்துவுடன் சீரியல் நடிகை எடுத்த புகைப்படம்! சின்மயி-க்கு பதிலடி கொடுத்த விஜே அர்ச்சனா
பிரபல பாடகியான் சின்மயில் வைரமுத்துவை பற்றி படுமோசமான வார்த்தைகளில் விமர்சனம் செய்தும் அவரால் பல பெண்கள் சீரழிக்கப்பட்டுள்ளார்கள் என்று கருத்துக்களை பகிர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.
அதேபோல் சீரியல் நடிகை விஜே அர்ச்சனா, வைரமுத்துவுடன் ஆசிப்பெற்று புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
இதை பார்த்த சின்மயி, ஆரம்பத்தில் இப்படித்தான் ஆரம்பிப்பார். தயவு செய்து கவனமாக இருங்கள். அவரை சந்திக்க போகும் போது துணைக்கு யாரையாவது கூட்டிச்செல்லுங்கள் என்ற கருத்தினை பதிவிட்டார்.
இதற்கு பதிலளித்த விஜே அர்ச்சனா, என் தந்தை ஒரு தமிழ் பேராசிரியர். வைரமுத்து சாரின் நாட்படு தேறல் பாடலுக்கு மிகப்பெரிய ரசிகை. ஷூட்டிங்கின் போது அவரை திடீரென மேடையில் சந்தித்தேன். ரசிகை என்று கூறியது என்னை ஆசிர்வதித்தார்.
அவரிடம் பேச மட்டும் செய்தேன். ஒரு விசயம் நடந்தால் அதைபற்றி பேசத்தான் செய்வார்கள். ஊர் வாயை நம்மால் அடக்க முடியாது என்று பதிலடி கொடுத்து ஒரு கருத்தினை விஜே அர்ச்சனா கூறியுள்ளார். இந்த அவமானம் தேவையா என்று நெட்டிசன்கள் சின்மயியை கலாய்த்து வருகிறார்கள்.