கன்னத்தில் பளார் விடுவேன்!! மேடையில் சில்மிஷம் செய்த நடிகருக்கு தொகுப்பாளினி ஐஸ்வர்யா பதிலடி..
Gossip Today
Cool Suresh
By Edward
படத்தின் பிரமோஷன் என்கிற பெயரில் சமீபகாலமாக நடிகர் கூல் சுரேஷ் எல்லைமீறிய விசயங்களை செய்து வருகிறார்.
அப்படி, சில தினங்களுக்கு முன் மன்சூர் அலிகான் நடித்த சரக்கு படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூல் சுரேஷ், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
தேவையில்லாமல் மாலை போட்டு அநாகரீகமாக நடந்து கொண்டது சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜே ஐஸ்வர்யா, இதற்கு முன் ஒரு நிகழ்ச்சியில் என்னிடம் வம்பு செய்தார் என்றும் இனியொருமுறை சுரேஷ் என்பவர் இந்த மாதிரி நடந்து கொண்டால் கன்னத்தில் ஒரு அடியாவது கொடுத்துவிடுவேன் இல்லாட்டி போலிஸில் புகார் கொடுக்கலாம் என்று இருக்கேன் என்று கூறியிருக்கிறார்.
இதற்கு நெட்டிசன்கள் ஆதரவாகவும் கூல் சுரேஷை கண்டபடி திட்டியும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.