14 வயசு சின்ன பொண்ணு கிட்ட இப்படியா கேட்பது! பதிலடி கொடுத்த விஜே அர்ச்சனா
பிரபல தொலைக்காட்சி சேனல்களில் விஜேவாக பல ஆண்டுகள் பணியாற்றி பிரபலமானவர் தொகுப்பாளினி அர்ச்சனா. தன்னுடைய திறமையால் முன்னேறியவர்கள் வரிசையில் இருக்கும் அர்ச்சனா சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று மக்கள் மனதை ஈர்த்தார்.
தான் தொகுப்பாளினியாக இருக்கும் போது தன் மகள் சாராவையும் விஜேவாக்கி பார்த்தார். அதன்பின் பல நிகழ்ச்சிகளை அம்மாவும் மகளும் இணைந்து நடத்தி வந்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு யூடியூப் சேனலில் கவனம் செலுத்தி வந்தனர்.
சமீபத்தில் பாத்ரூம் டூர் என்ற வீடியோ மூலம் மோசமான விமர்சனங்களை சந்தித்தனர். இதன்பின் அர்ச்சனா மகளை சிறுமி என்றும் பாராமல் படுகேவளமான வார்த்தைகளை கொண்டு கருத்துக்களை பதிவிட்டு வந்தனர் நெட்டிசன்கள்.
தற்போது லைவ்வில் உரையாடிய சாராவிடம் ஒரு நபர் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அர்ச்சனா 15 வருடம் கழித்து அம்மா, அப்பாவுடன் சேர்ந்து பெண் கேட்டு வா என்று பதிலடி கொடுத்துள்ளார். இதற்கு பலர் பாராட்டினை கூறி வருகிறார்கள்.
Archana's response to someone who proposed her daughter Zaara ???? pic.twitter.com/0QBZ0TvbiW
— Anbu (@Mysteri13472103) April 9, 2022