கணவரை விவாகரத்து செய்துவிட்டாரா விஜே அர்ச்சனா!! மகள் முன்பே அதிர்ச்சி கொடுத்த தருணம்.
பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகளையும் சினிமா சார்ந்த விழாக்களையும் தொகுத்து வழங்கி பிரபலமானவர் தான் விஜே அர்ச்சனா.
சில ஆண்டுகளுக்கு முன் பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற அர்ச்சனா, தன் மகள் சாராவையும் தொகுப்பாளினியாக அறிமுகப்படுத்தினார்.
2004ல் வினீத் முத்துகிருஷ்ணனை திருமணம் செய்து வாழ்ந்து வந்த அர்ச்சனா சாரா என்ற மகளையும் பெற்றார். மகளுடன் ரீல்ஸ் வீடியோக்கள் யூடியூப் சேனல் ஆரம்பித்து பிஸியாக இருக்கும் அர்ச்சனா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தன் கணவர் மற்றும் விவாகரத்து பற்றி பேசியுள்ளார்.
அப்போது ஒரு மாதத்திற்கு முன் நானு என் கணவரும் விவாகரத்து தயாராகிவிட்டோம் என்று என் மகள் சாரா தான் எங்களுக்கு அட்வைஸ் செய்து மீண்டும் சேர்த்து வைத்ததாகவும் கூறி அழுதுள்ளார். இந்த விசயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.