யோகி பாபுவை அசிங்கப்படுத்தினேனா? உதவாக்கரைகள்!! கோபத்தில் விஜே பாவனா..
யோகி பாபு
நடிகர் ரவி மோகன் ஸ்டுடியோ திறப்பு விழாவில், நடிகர் யோகி பாபுவை அவமதித்து பேசியதாக தொகுப்பாளினி விஜே பாவனாவை பலரும் விமர்சித்து வந்துள்ளார். விழாவில் யோகி பாபுவிடம், எங்க இருந்தீங்க நீங்க, உங்கள நான் பார்க்கவே இல்லையே, முன்னாடி வாங்க, மைக்கை பிடிங்க, கொஞ்சம் எழுந்து நில்லுங்க சார் என்று பாவனா கூறினார்.
அதன்பின் எழுந்து நின்ற யோகிபாபுவை, கொஞ்சம் மைண்ட் கேம் விளையாடலாமா, உங்கள் மைண்ட் வாய்ஸ் என்ன சொல்லுது என கேட்டதும் யோகி பாபு, என்னை வச்சு ரவி சார் படம் பண்றாரு, அந்த படம் நல்லா வரணும், அவர் தயாரிப்பு நிறுவனமும் நல்லபடியா வளரணும் என்றார்.
உடனே பாவனா நல்லவரு மாதிரி பேசுறீங்க. அதை தாண்டி என்ன நினைக்கிறீங்க என்று கேட்டதும், பின்ன நான் பின்னாடி நிற்கும் போது அந்த மனுஷனுக்கு வழி விடாதீங்க, சேர் போடாதீங்கன்னு உன்னை மாதிரி நான் நினைக்கலயேம்மா, நான் நல்லதுதானே நினைத்தேன் என்று கூறினார் யோகி. ஆமா நீங்கள் ரொம்ப நல்லவருதான்" என்று பாவனா கூறியதற்கு யோகிபாபு, அத ஏன் கொஞ்சம் சிரிச்சிகிட்டு சொல்லலாமே, குழாயடி சண்டை போடுற மாதிரி பேசுற என்று கூறியிருக்கிறார்.
இதனையடுத்து இந்த வீடியோ இணையத்தில் பரவ நெட்டின்கள் பலரும் பாவனாவை கண்டபடி விமர்சித்தனர். இதனால் கோபப்பட்ட பாவனா ஒரு பதிவினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
செம்ம செருப்படி reply யோகி பாபு 👏
— ஹேமா 🦋✨❤️ (@karigai2023) August 29, 2025
கேவலமான attitude பாவனா 😡
எதுக்கு இவ்வளவு கேவலமா treat பண்ணுது ,
Is there any reason behind her attitude?#Brocode#Ravi
pic.twitter.com/utZEQMptNn
கோபத்தில் விஜே பாவனா
அதில், மக்களே எனக்கு அதிர்ச்சியாக இருக்கு. நானும் யோகிபாபுவும் ஜாலியாக பேசிக் கொண்டதை பலரும் தவறான கோணத்தில் பார்த்து பகிர்கிறார்கள். இதற்கு முன்னர் நானும் யோகிபாபுவும் இப்படி ஜாலியாக பேசிக் கொண்டதை எல்லாம் நீங்கள் பார்த்துள்ளீர்களா?.
குறிப்பாக ஐபிஎஸ் சமயங்களில் சிஎஸ்கே போட்டியின் போது, நாங்கள் அதே போல் மிகவும் ஜாலியாக பேசதான் முயற்சித்தோம், வெறும் 30 நொடி வீடியோவை பார்த்துவிட்டு யோகிபாபுவை நான் அசிங்கப்படுத்திவிட்டேன் என பலரும் பல கதைகளை காட்டுகிறார்கள்.
யோகிபாபுவை எனக்கு நன்றாக தெரியும். நாங்கள் ஜாலியாகதான் பேசினோம். அதை புரிந்து கொள்ளாமல் சில உதவாக்கரைகள் வெறுப்பை பரப்புகிறார்கள், இதுல நான் மன்னிப்பு வேற கேட்க வேண்டும் என்று பதிலடி கொடுத்துள்ளார் பாவனா.