ஆலின்-ஆல் அழகு ராணி! மறைந்த VJ சித்ராவின் இதை மட்டும் யாராலும் முறியடிக்கவில்லை!
சின்னத்திரையில் அனைத்து துறைகளில் பங்கேற்று ஆல்ரவுண்டராக மாறுவது அவ்வளவு சுலபம் கிடையாது. ஆனால் அதை குறுகிய காலத்தில் செய்து காட்டியவர் நடிகையும் விஜேவுமான சித்ரா. தொகுப்பாளினி, நடனம், பாடல், நகைச்சுவை, நடிகை என அனைத்து துறையிலும் பணியாற்றி பிரபலமானார் விஜே சித்ரா.
கடந்த 2020 டிசம்பர் 9ல் தற்கொலை செய்து மரணமடைந்தார். பெரிய அதிர்ச்சியை கொடுத்த அவரின் மறைவு தமிழ் ரசிகர்களின் நீங்கா வலியாகவே இருந்து வருகிறது. மறைந்து ஒரு வருடமாகிய நிலையில் அவர் பற்றிய செய்திகள் இணையத்தில் வெளியாகி வருகிறது.
அந்தவரிசையில், மக்கள் தொலைக்காட்சியில் விளையாடு வாகை சூடு, சட்டம் சொல்வது என்ன என்ற நிகழ்களில் ஆரம்பித்த தொகுப்பாளினி பணி சரவணன் மீனாட்சி, பாண்டியன் ஸ்டோர்ஸ், ஜோடி நிகழ்ச்சி என விஜய் தொலைக்காட்சியில் நடிகையாகவும் தொகுப்பாளினியாகவும் பணியாற்றினார்.
பின் ஜெயா தொலைக்காட்சியில் மன்னன் மகள் என்ற சீரியலிலும், வேந்தர் டிவியில் ரிங் ஓ ரிங் என்ற நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் பணியாற்றியுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் சின்னப்பாப்பா பெரியப்பா சீரியலில் நடித்தும் வந்தார். கலர்ஸ் தொலைக்காட்சியில் வேலுநாச்சி, ஜீ தமிழில் ஆஹா மாமியார் ஓஹோ மருமகள் நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாகவும் பணியாற்றியுள்ளார். பின் மரணத்திற்கு முன் கால்ஸ் என்ற படத்திலும் நடித்து நடிகையாக அறிமுகமாகினார்.