2 ஆண்டுகளுக்கு பின் வெளிச்சத்திற்கு வரும் உண்மை! விஜே சித்ரா தற்கொலைக்கு காரணம் இவர்களா?

Serials V. J. Chitra
By Edward Apr 29, 2022 06:47 AM GMT
Report
145 Shares

சின்னத்திரையில் விஜேவாக பணியாற்றி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் விஜே சித்ரா.

ஹேமந்த் என்பவரை திருமணம் செய்தபின் 2020 டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி அதிகாலை ஓட்டலில் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியளித்தது.

யார் இதற்கு காரணம் என்று கணவர் ஹேமந்த் உட்பட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் சித்ராவின் தற்கொலைக்கு காரணமாக இருந்தவர்கள் தன்னை பணம் கேட்டு மிரட்டுவதாக ஹேமந்த் போலிஸ் கமிஷ்னரிடம் புகாரளித்துள்ளார்.

என் மனைவி மரணத்திற்கு நான் தான் காரணம் என்று என்மீது சேற்றை வீசினார்கள். அதை துடைக்க தான் இப்போது வரை உயிரோடு இருக்கிறேன். என் மனைவியின் தற்கொலைக்கு காரணமாக இருந்த மாபியா கும்பல் என்னை கொன்றுவ் விடுவேன் என மிரட்டி வருகிறார்கள்.

பணம் பரிக்கும் முயற்சியில் இன்னொரு கும்பலும் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க முரட்டுகிறார்கள். இதனால் எனக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக புகாரளித்துள்ளார்.