15 நிமிஷம் கூட நிற்க முடியாத தொகுப்பாளினி டிடி! வாக்கிங் ஸ்டிக்கில் நடக்க இதுதான் காரணமா!!
நிகழ்ச்சி தொகுப்பாளினியாக கடந்த 21 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வருபவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. பிரபல தொலைக்காட்சி சேனலில் ஜோடி நம்பர் 1 நிகழ்சியில் போட்டியாளராக பங்கேற்று அதே நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாகவும் மாறி பிரபலமானார் டிடி.
தன்னுடைய தனித்துவமான மேடைப்பேச்சினால் ரசிகர்கள் சுலமாக ஈர்த்து நிகழ்ச்சியை கொண்டு செல்வார். சின்னத்திர , வெள்ளித்திரை என தற்போது வரையில் ஈடுபாடு கொண்டு வரும் டிடி, காப்பி வித் டிடி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றார்.
இதனை அடுத்து ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்ட டிடி மூன்றே ஆண்டுகளில் அவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்.
இதற்கு காரணம் பலவிதமாக கூறியநிலையிலும் டிடி தன்னுடைய தொகுப்பாளினி வேலையை விடாமல் இருந்தார். தற்போது படவாய்ப்பிற்காக போட்டோஷூட், விளம்பர படம் என பிஸியாக இருந்து வருகிறார்
. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விருதுவிழாக்களை தொகுத்து வழங்கி வந்த டிடி தி லெஜண்ட் சரவணா படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை விஜே அர்ச்சனாவுடன் இணைந்து தொகுத்து வழங்கியுள்ளார்.
நிகழ்ச்சிக்கு டிடி வாக்கிங் ஸ்டிக்கை பயன்படுத்தி தாங்கி தாங்கிநடந்து வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே காலில் ஏற்பட்ட பிரச்சனையால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
அதன் பின்விளைவு தான் காரணமாம். சரியாக 15 நிமிடம் கூட டிடி-யால் நிற்க முடியாத சூழல் இருக்கிறதாம். அதனால் தான் டிடி இப்படி வாக்கிங் ஸ்டிக் பயன்படுத்த வேண்டியதாகிற்றாம்.