18+ படத்தை பார்த்து அம்மாவிடம் மாட்டிக்கொண்ட தொகுப்பாளினி!! வெச்சு செய்யும் நெட்டிசன்கள்..
பிரபல தொலைக்காட்சி சேனலான ஸ்டார் விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலமானவர் விஜே ஜாக்குலின். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை விஜே ரக்ஷனுடன் இணைந்து தொகுத்து வழங்கிய ஜாக்குலின் ரக்ஷனுடன் காதல் கிசுகிசுக்களிலும் சிக்கினார்.
இதன்பின், நயன் தாராவுக்கு தங்கையாக கோலமாவு கோகிலா படத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமாகினார். அதன்பின் படவாய்ப்பு இல்லாமல் மீண்டும் சின்னத்திரைக்கு சென்று சீரியலில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார்.
அவர் நடிப்பில் தேன்மொழி சீரியல் நல்ல வரவேற்பு மக்கள் மத்தியில் பெறாமல் பாதியிலேயே மூடப்பட்டது. தற்போது உடல் எடையை குறைத்து கிளாமர் லுக்கிற்கு மாறியிருக்கிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், கல்லூரியில் படிக்கும் போது 18+ ஆங்கில படம் பார்த்து அம்மாவிடம் மாட்டியிருக்கிறேன். ஆங்கில படத்தில் இருக்கும் அந்தமாதிரி காட்சிகள் தான் பார்த்திருக்கிறேன்.
குறிப்பிட்ட படங்களை நான் பார்த்ததில்லை என்று கூறியிருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் இப்படியொரு உருட்டு உருட்டிரீங்களே என்று கலாய்த்து கருத்துக்களை கூறி கிண்டலடித்து வருகிறார்கள்.