துரத்திவிட்ட தொலைக்காட்சி! வாய்ப்பில்லாமல் விஜே வேலைக்கே திரும்பிய சீரியல் நடிகை ஜாக்குலின்..

Serials
By Edward May 03, 2022 09:43 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளராக பணியாற்றி சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையிலும் நடித்து கொடிக்கட்டி பறந்து வந்தவர்கள் வரிசையில் இணைந்திருப்பவர் விஜே ஜாக்குலின். கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் விஜே தர்ஷனுடன் இணைந்து தொகுத்து வழங்கி வந்தார் ஜாக்குலின்.

அவரது குரலை வைத்து பல கலாய்த்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நிகழ்ச்சியை நடத்துவார். விஜேவாக இருந்த ஜாக்குலின் அதே தொலைக்காட்சியில் தேன்மொழி BA என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்தார்.

ஒருசில ஆண்டுகளுக்கு பிறகு சீரியல் முடிந்த நிலையில் படங்களில் கமிட்டாகியும் வந்தார்.

தற்போது சீரியல் எதுவும் இல்லாமல் மீண்டும் விஜேவாக டான் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். லைக்கா பிரடொக்ஷன் யூடியூப் சேனலில்எஸ் ஜே சூர்யா, சிவாங்கி, இயக்குனர் சிபி சக்கரவர்த்தி, மிர்ச்சி விஜய், சரவணன் போன்றவர்களை காமெடியாக பேசி தொகுத்து வழங்கியுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் திரும்பவும் விஜே-வா என்று கலாய்த்தும் வருகிறார்கள்.