திருமணமாகி பல ஆண்டுகளாக தலைமறைவு! ரீஎண்ட்ரி கொடுக்கும் குட்டி நடிகை..

television kalyani
By Edward Dec 22, 2021 04:39 AM GMT
Report

வெள்ளித்திரையை போன்று சின்னத்திரையில் பணியாற்றிய சிலர் பல ஆண்டுகளுக்கு பின் காணாமல் போய்விடுகிறார்கள். அப்படி குட்டி நட்சத்திரமாக சில படங்களில் நடித்து பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் நடிகை கல்யாணி.

அள்ளித்தந்த வானம், ஸ்ரீ, ரமணா, ஜெயம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார். 2006-ஆம் ஆண்டு வெளியான மறந்தேன் மெய்மறந்தேன் என்ற படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். அதன்பிறகு கல்யாணி தன்னுடைய பெயரை பூர்ணிதா என்று மாற்றிக் கொண்டார்.

கடந்த 2013ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த ரோகித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு நடிப்பதில் ஆர்வம் காட்டாத கல்யாணி, தற்போது மீண்டும் சின்னத்திரையில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

இவருடன் ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன்4 நிகழ்ச்சியில் KPY பிரபலம் அமுதவாணன் இணைந்த நடுவராக செயல்பட உள்ளார். அமுதவாணன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு காமெடி நிகழ்ச்சிகளிலும், ஜோடி நம்பர் ஒன் என்ற நடனப் போட்டியில் முதல் பரிசை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே பன்முகத் திறமை கொண்ட அமுதவாணன் மற்றும் கல்யாணி இருவரும் சேர்ந்து, கலக்கப் போகும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன்4 நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர். இதற்கான முழு விபரம் அடங்கிய ப்ரோமோ கூடிய விரைவில் வெளியாக உள்ளது.