விக்ரம்-ல் விஜய் சேதுபதிக்கு மூன்று பொண்டாட்டியா? புகைப்படத்தை லீக் செய்த VJ மகேஷ்வரி
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி தற்போது தியேட்டரில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் படம் விக்ரம். பல எதிர்ப்பார்ப்புகள் மத்தியில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாக பேராதரவை பெற்று வருகிறது.
படத்தின் சில காட்சிகளை ரசிகர்கள் இணையத்தில் வீடியோ எடுத்து வெளியிடுவது வழக்கம். ஆனால் படத்தில் முக்கியமாக சீக்ரெட்டாக வைத்திருக்கும் கதாபாத்திரங்களின் காட்சிகளும் வெளியாகி படத்தில் ஏற்படுத்தும் சுவாரஷ்த்தை கெடுத்து விடும்.
அப்படி விக்ரம் படத்தில் நடித்து மகேஷ்வரி ரசிகர்கள் பதிவிடும் சில தியேட்டர் வீடியோக்களை ஸ்கிரீன் ஷாட் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். ஒரு படத்தில் சீக்ரெட்டான ஒரு விசயத்தை ஏன் இப்படி உடனே உடைத்து கெடுத்து விடுகிறீர்கள் என்று கமல் ரசிகர்கள் கண்டபடி திட்டி வருகிறார்கள்.
60க்கும் மேற்பட்டவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் விஜய் சேதுபதிக்கு மூன்று மனைவிகள் இருக்கும் கதையை இப்புகைப்படம் அப்படியே வெளிக்காட்டியதால் விஜே மகேஷ்வரியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
படவாய்ப்பு கிடைப்பதே பெரிய விசயம் அதிலும் கமல் படம். அப்படியிருக்கையில் இந்த காரியத்தை செய்யலாமா மேடம் என்றும் கூறி வருகிறார்கள்.


