ரொமான்ஸ் சீன்லாம் கட் பண்ணிட்டாரு? விக்ரம் இயக்குனரால் புலம்பும் நடிகை மகேஷ்வரி
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வெளியான படம் விக்ரம். கடந்த ஜூன் 3 ஆம் தேதி வெளியான இப்படம் 200 கோடி வசூலை செய்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
விஜய்சேதுபதிக்கு ஜோடியாக இப்படத்தில் மூன்று சீரியல் நடிகைகள் மனைவிகளாக நடித்திருப்பார்கள். அவர்களில் ஒருவர் தான் நடிகையும் தொகுப்பாளினியுமான மைனா என்கிற நந்தினி. சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், படத்தில் பல காட்சிகளில் கஷ்டப்பட்டு நடித்திருந்தேன்.
ஆனால் இரு சீன்களே படத்தில் ஒளிப்பரப்பாகியது. பல காட்சிகளை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கத்திரி போட்டு தூக்கிவிட்டார் என்று புலம்பியுள்ளார். மூனாவது பொண்ணாட்டிக்கு(ஷிவானி) தான் அதிகமாக ரொமான்ஸ் சீன் இருந்துச்சி.
என் ரொமான்ஸ் சீன்லாம் கட் பண்ணிட்டாரு லோகேஷ் சார் என்று காமெடியாக பேசியுள்ளார் விஜே மகேஷ்வரி.
படத்தினை மொத்தமாக 4 மணிநேரம் அளவில் காட்சிகள் எடுத்திருந்தார். டப்பிங் வரை அத்தனை மணிநேரம் இருந்தும் 2.53 மணி நேரம் மட்டுமே படத்தில் இடம்பெற்றுள்ளது.