பொண்ணு, பார்ட்டிக்கு சென்று ஆணுடன் ஆட்டம் போட்டா தப்பா? சர்ச்சையை கிளப்பிய தொகுப்பாளினி..

Actors
By Edward May 19, 2022 02:30 PM GMT
Report

பிரபல யூடியூப் சேனல் மூலம் தமிழ் ரசிகர்கள் கவனிக்கும் தொகுப்பாளினியாக மாறியவர் விஜே பார்வதி. மக்களிடம் சென்று அதிலும் இளைஞர்களிடம் சென்று அடல்ட் டாப்பிக்கை எடுத்து கருத்தினை கேட்டு பதிலை வாங்கும் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்.

இந்நிகழ்ச்சி கொடுத்த வரவேற்பால் டாப் விஜே இடத்தினை பிடித்தார். மேலும் கடந்த ஆண்டு நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலமானார். இதன்பின் வேறொரு யூடியூப் சேனலில் பணியாற்றி நட்சத்திரங்களை பேட்டியெடுத்தும் வருகிறார்.

இந்நிலையில் க்ளாமர் போட்டோஷூட் வீடியோக்களை பகிர்ந்து வரும் வருகிறார். சமீபத்தில் அவரது 26 பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடிய விடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக ஆடிய குத்தாட்டதை சிலர் கண்டபடி கருத்துக்களை கூறி கேலி செய்து வந்தனர். இதற்கு பதிலடி கொடுத்த விஜே பார்வதி, ஒரு பெண் பார்ட்டிக்கு போகக்கூடாதா? ஆடக்கூடாதா?.

ஒரு ஆடையை வைத்து பெண்ணை எப்படி விமர்சிப்பீர்கள் என்னுடன் ஆடிய ஆணை பற்றி எதுவும் கூறாத நீங்கள் என்னை பற்றி ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று கண்டபடி திட்டித்தீர்த்துள்ளார். இதற்கு பலர் ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


Gallery