10 வருட தொகுப்பாளினி பயணம்..கதறி அழுத விஜே பிரியங்கா.. இதற்கு கூட கணவர் வராதது ஏன்?
பிரபல தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெள்ளித்திரை படங்களில் பிஸியாக நடித்து வருபவர்கள் பலர். அதில் ஒருசிலர் மட்டுமே அப்படியே தொகுப்பாளர் வேலையை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
அந்தவரிசையில் இருப்பவர் தான் விஜே பிரியங்கா. சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானார். தன்னுடைய தனுத்துவமாக காமெடியால் மக்களை மகிழ்ச்சியுடன் நிகழ்ச்சியை எடுத்து செல்லும் குணம் கொண்டவர்.
சில ஆண்டுகளுக்கு முன் டெக்னீஷியன் பணியாற்றிய பிரவீன் குமாரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கணவர் புராணம் பாடி வந்த பிரியங்கா கடந்த சில ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல் வெளியானது.
இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகவும் தன் அம்மா தம்பியுடன் பிரியங்கா வசித்து வருவதாகவும் செய்திகள் பரவியது. சமீபத்தில் கூட அம்மாவும் தம்பியும் தான் என்னுடைய உலகம் என்று கூறி அவர்களுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்தார்.
இந்நிலையில் விஜே-வாக பணியாற்றி 10 ஆண்டுகள் நிறைவுற்றதை விஜய் தொலைக்காட்சி நினைவுப்படுத்தி கொண்டாடியது. அப்போது நிகழ்ச்சிக்குழுவினர் வழங்கிய புகைப்படத் தொகுப்பில் கூட பிரியங்காவின் கணவர் புகைப்படம் இடம் பெறவில்லை.
அப்படியென்றால் தொலைக்காட்சி பிரபலங்களுக்கே தெரிந்துள்ளது பிரியங்காவுக்கு பிரிவீனுக்குமிடையில் பிரச்சனை என்று. ஆனால் பிரியங்கா இதை வெளியுலகத்திற்கு வெளிப்படையாக கூறாமல் மழுப்பி மறைத்து வருகிறாரே என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள் நெட்டிசன்கள்.