பிக்பாஸ் புராணம் பாடும் தொகுப்பாளினி? விருது வாங்கியும் கணவரை கண்டுகொள்ளாத பிரியங்கா!

Priyanka Deshpande Super Singer
By Edward Apr 26, 2022 09:03 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர்கள் பலர். அதில் தற்போது முக்கிய இடத்தினை பெற்றிருப்பவர் விஜே பிரியங்கா. சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த பிரியங்கா பிக்பாஸ் 5 சிசனில் கடந்த ஆண்டு கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி முடிவில் மக்கள் மனதை கவர்ந்தவர் இரண்டாம் இடத்தினை பிடித்தார். அதன்பின் பிக்பாஸ் பிரபலங்களுடன் ஊர்சுற்றியும், பார்ட்டி வைத்தும் நாட்களை கழித்தார். சமீபத்தில் சிறந்த பெண் தொகுப்பாளினி விருதினையும் வாங்கினார்.

இப்படி பிக்பாஸ், விருது என இருந்து வரும் பிரியங்கா தன் கணவரை கண்டுகொள்ளாமல் இருந்து வருவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஒரே துறையில் இருந்து திருமணம் செய்து கொண்ட இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

கடந்த ஒரு வருடங்களாக பிரியங்கா ஆசை கணவரை சந்திக்காமல் இருப்பது ஒரு வேலை மற்றவர்களை போல் பிரியங்காவும் விவாகரத்து பெற்று விட்டாரா என்ற கேள்வி மக்களிடம் எழுந்து வருகிறது. இதுகுறித்து பிரியங்கா தரப்பில் மெளனமாக இருந்து வருவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.