ராமரை அந்த வார்த்தை கூறி திட்டிய விஜே பிரியங்கா!! கைத்தட்டி சிரித்த பயில்வான்..
பிரபல தொலைக்காட்சி சேனலான ஸ்டார் விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளர்களாக பணியாற்றி வருபவர்கள் மாகாபா ஆனந்த், பிரியங்கா டெஸ்பாண்டே. இருவரும் சேர்ந்து நடத்தும் நிகழ்ச்சிக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.
அந்தவகையில் சூப்பர் சிங்கர், ஓ சொல்றியா ஓ ஓம் சொல்றியா என்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்கள். சில வாரங்களுக்கு முன் பயில்வான், ராமர், அரந்தாங்கி நிஷா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மொக்கையாக பேசிய ராமரை பிரியங்கா கலாய்த்துள்ளார்.
பொறுமையை இழந்த விஜே பிரியங்கா, ரோஜா பூ மாலை என்ற இரட்டை அர்த்த வசனத்தை கூறி ராமரை திட்டியிருக்கிறார். இதற்கு பயில்வான் ரங்கநாதன் கைத்தட்டி விடாமல் சிரித்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருவதோடு பொது நிகழ்ச்சியில் இப்படியா பேசுவது என்று பிரியங்காவை திட்டி வருகிறார்கள் நெட்டிசன்கள்.