திருமணத்திற்கு முன் பக்கத்து வீட்டு பையனை துறத்தி துறத்தி காதலித்த விஜே பிரியங்கா.. வீடியோ..
பிரபல தொலைக்காட்சி சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பல ஆண்டுகள் பணியாற்றி பிரபலமானவர் விஜே பிரியங்கா டெஸ்பாண்டே. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மாகாபா ஆனந்துடன் ஆரம்பித்த விஜே பணி தற்போது பிக்பாஸ் பிரபலம் வரை கொண்டு சென்றிருக்கிறது.
ஒரு எபிசோட்டிற்காக லட்சத்தில் சம்பளம் வாங்கும் விஜே-வாக திகழ்ந்து வருகிறார். கடந்த பிக்பாஸ் 5 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரன்னர் அப் இடத்தினை பிடித்தார். தற்போது பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜுவுடன் ராஜு வீட்ல பார்ட்டி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.
கடந்த வாரம் நடிகை அமலா பால் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகியது. வெளிப்படையாக பேசிய அமலா பாலிடம் யாரையாவது துறத்தி துறத்தி காதலிச்சி இருக்கீங்களா என்று கேட்டுள்ளார் ராஜு.
அதற்கு பிரியங்கா என்னுடைய பக்கத்து வீட்டு பையனை துறத்தி துறத்தி காதலிச்சி இருக்கேன் என்றும் அவன் என்னை கண்டுக்காமல் போய்விட்டான் என்றும் கூறியுள்ளார்.
அதன்பின் தான் பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார் பிரியங்கா. ஆனால் தற்போது கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், கணவர் பற்றிய உண்மை செய்தியை வெளியில் கூறாமல் தவிர்த்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது.