கேமராமேன் 18 வயசுலேயே அப்படி கேட்டாங்க, அதுவும் தப்பா!! Vj ரம்யா உருக்கம்..
விஜய் டிவியில் பல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் vj ரம்யா.
இவர் ஆடை, கேம் ஓவர் மற்றும் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் இவர் பல திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரம்யா, உடற்பயிற்சி சார்ந்த வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரம்யா , " நான் சிறுவயதில் பள்ளி படிப்பை முடித்து விட்டு திரைப்பட ஷூட்டிங்கிற்கு சென்று விடுவேன். அப்போது அசதியால் என் கண்கள் சிவந்துவிடும்".
"இதனால் கேமரா மேன் ஒருவர் என்னிடம் 'பப்புக்கு போய்ட்டு சரக்கு அடிச்சிட்டு வந்தியா' என்று என்னிடம் கேட்டார். இதை கேட்டவுடன் நான் மிகுந்த வேதனை அடைந்தேன். அவரிடம் என்ன பேசுவது என தெரியாமல் நான் ஓரமாக சென்று அழுந்து கொண்டு இருந்தேன். அந்த நேரத்தில் நான் அவருக்கு பதிலடி தராததை நினைத்து இப்போது வருந்துகிறேன்" என்று கூறினார்.