அதிதி சங்கருக்கு பிறகு கண்ணீர் மல்க அழுது வெளியேறிய நடிகர்.. சிம்புவால் ஏற்பட்ட சம்பவம்..
தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று பேர் போன நடிகர் சிம்பு கடந்த பல வருடங்களுக்கு பிறகு அவரின் கடின உழைப்பால் நடித்து வந்த படம் வெந்து தணிந்தது காடு.
இப்படம் ஆரம்பத்தில் இருந்து பல சந்தேகங்களுடன் இருந்த நிலையில் ஏ ஆர் ரகுமானின் இசை மக்கள் மத்தியில் சூப்பரான இடத்தை பிடித்தது.
சிம்புவின் மிரட்டலான நடிப்பில் விக்ரம், கேஜிஎஃப் படத்தை மிஞ்சும் அளவிற்கு படத்தின் டிரைலர் வெளியாகி ஷாக் கொடுத்துள்ளது. இந்நிலையில் எல்லா படத்திற்கு விமர்சனம் கூறி இணையத்தை பரபரப்பாக்கி வருபவர் கூல் சுரேஷ்.
சமீபத்தில் இயக்குனர் சங்கர் மகள் அதிதி சங்கரை காதலிப்பதாக கூறியும் பின் மன்னிப்பு கேட்டும் வீடியோவை பகிர்ந்து வைரலாக்கினார். தற்போது சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ வெளியீட்டிற்கு பின் கண்ணீர் மல்க வெளியேறி அழுது வந்துள்ளார் கூல் சுரேஷ்.
வெந்து தணிந்தது காடு, சிம்புவுக்கு வணக்கத்த போடு என்ற டயலாக் இணையத்தில் வைரலாகி வருகிறது.