உடல் ரீதியாக தொடர்பு வைத்துக் கொண்டோம்!! முத்துக்குமரன் மீது பெண் புகார்..
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டிலை கைப்பற்றியவர் தான் முத்துக்குமரன். முற்போக்கு சிந்தனைகள் பேசி பலரது கவனத்தையும் ஈர்த்த முத்துக்குமரன் பற்றி வஹிதா என்ற பெண் வீடியோவை வெளியிட்டுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வஹிதா - முத்துக்குமரன்
எனக்கு இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது என்று தெரியவில்லை, மனதில் இருப்பதை சொல்லிவிட்டு கிளம்புகிறேன். கடந்த முறை நான் முத்துக்குமரனை சந்திக்கும்போது அவர் என்னை வீட்டுக்கு கூப்பிட்டார். அது கொஞ்சம் கடத்தல்தான். நான் ஏற்கனவே கல்யாணமானவள் என்று அவருக்கு தெரியும். 5 வயதில் ஒரு பையன் இருக்கிறான் பிரேக்கப்பில் இருக்கிறேன் என்பதும் அவருக்கு தெரியும். 2 மாசமாக நான் கஷ்டத்தில் இருந்தபோது அவர் என்னிடம் பழகி இருந்தார்.
அப்போது ஆறுதலாக பேசிக் கொண்டிருந்தப்பின் அவருடைய வீட்டில் வைத்து எனக்கு ஆயிரம் முத்தம் கொடுத்தார். நிறைய காதல் கொடுத்தார், அதற்காக நான் காத்திருந்தேன். நான் காதலால் ஏமாற்றப்பட்டதால் அவருடைய காதல் எனக்கு ரொம்பவும் சந்தோஷத்தையும், மகிழ்ச்சியும் கொடுத்தது. என்னை நீங்கள் கிண்டல் செய்தாலும் பரவாயில்லை நானும் அவரும் உடல் ரீதியாக தொடர்பு வைத்துக் கொண்டோம். பிரேக்கப் இருந்த என்னை பேசியே மயக்கிவிட்டார்.

நான் தாலி கட்டுகிறேன் என்று சொல்லி ஆயிரம் முத்தம் கொடுத்தார். ஆண்களை நம்பக்கூடாது என்று எல்லோரிடமும் நான் சொல்லுவேன், ஆனால் நானே இப்படியாகிவிட்டேன். உன் விருப்பம் இல்லாமல் உன்னை தொடமாட்டேன் என்று திரும்பி திரும்பி சொன்னார். தாலி கட்டுவேன் என்று அவர் சொன்னபோது நான் நம்பிவிட்டேன், ஆனால் எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறேன், போதும்டா சாமி, முடிய. எல்லாமே முடியப்போகிறது, இனிமேல் எனக்கு தெம்பு இல்லை என்று மது அருந்தியும் மற்றும் சிகரெட் பிடித்தபடி தற்கொலை முயற்சிக்கு ஈடுப்பட்டுள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
Bhaiyamma wahidha about sexual predator biggboss muthukumaran #Justiceforwahidha #Muthukumaran https://t.co/DvXcZFQmSa
— Madras (@theMadras10) October 7, 2026