இளைஞர்களை சீரழிக்கும் முன்னணி நடிகர்கள் படம்! எல்லாத்துக்கு ஆயுதம் ஏந்துனா எப்படி...

rajini vijay kamal vikram annaatthe beast tamilactor
By Edward Apr 03, 2022 12:25 PM GMT
Report

தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தற்போது வன்முறையை தூண்டும் வண்ணம் உள்ளதாக சினிமா விமர்சகர்கள் பலர் கூறி வருகிறார்கள். அதிலும் போஸ்டர்களில் முன்னணி நடிகர்கள் தங்கள் படங்களில் ஆயுதங்களை ஏந்துவது போல் போஸ்டர்களை வெளியிடுகிறார்கள்.

சமீபத்தில் ரஜினியின் அண்ணாத்த படத்தில் கத்தியுடனும், கமலின் விக்ரம் படத்தில் துப்பாக்கியும், விஜய்யின் பீஸ்ட் படத்தில் கத்தி, துப்பாக்கியும், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் கத்தியும், தனுஷின் கர்ணன் படத்தில் கத்தியும் வைத்து போஸ்டர்களை வெளியிட்டு வருகிறார்கள்.

படங்களிலும் வன்முறையான காட்சிகள் அதிகமாக காணப்படுகிறது. அதேபோல் நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படையாக தன்னுடைய ரசிகர்களை சிகரெட் புடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட செய்திகளும் பல வெளிவந்தன. இருந்தும் ரசிகர்கள் சினிமாவில் பார்த்து புகைப்பிடிப்பது பெரிதும் அடங்கியவாறு தெரியவில்லை.

சினிமாவில் காட்டப்படும் ஆக்ரோஷமான சண்டை காட்சிகள் அனைத்தும் போலியானது என ரசிகர்கள் தாங்களே உணர வேண்டும். சினிமாவை ரசிகர்கள் ரசிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery