இப்படியொரு வெப்சீரிஸில் 44 வயதான நடிகை சிம்ரனா? அதுவும் தபுவின் கதாபாத்திரத்திலா!
தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை சிம்ரன். முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து பிரபலமாகி தன்னுடைய அழகிய நடிப்பால் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வருகிறார். தற்போது 44 வயதில் திருமணம் குழந்தைகளுக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்தும் வருகிறார்.
சமீபத்தில் பேட்ட படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடி போட்டு நடித்திருந்தார். இதையடுத்து போட்டோஹுட் பக்கம் சென்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். இந்நிலையில் இந்தி மொழியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் அந்தாதூன்.
2018-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் 3 தேசிய விருதுகளையும் தட்டிச் சென்றது. ராதிகா ஆப்தே, தபு இருவரும் இப்படத்தில் நடிகர்களுடன் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடித்து சர்ச்சையில் சிக்கினர். இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு என ரீமேக் செய்யவுள்ளார்கள்.
இதில் தமிழ் ரீமேக்கை பிரசாந்த் நடிக்க ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கவுள்ளார். தபு கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மீதமுள்ள நடிகர் நடிகைகளின் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அந்தாதூன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் ப்ரித்விராஜ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் ராஷி கண்ணா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.