நடிகர் மனோபாலாவிற்கு என்ன ஆச்சி? ஒரே ஒரு புகைப்படத்தால் அதிர்ந்த ரசிகர்கள்..

1 month ago

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பலர் முன்னேறி பல படங்களில் நடித்து வருகிறார்கள். அதேசமயம், தனக்கிருக்கும் குறையையே பாசிடிவ்வாக பார்த்து நடிப்பது பெரிய விஷயமாக இருக்கும்.

அப்படி காமெடி கலந்த தன்னுடைய நடிப்பாலும் ஒல்லியாக இருப்பதை விமர்சிப்பதை காதில் வாங்காமல் இருந்து நடித்து வருபவர் நடிகர் மனோ பாலா. 900 படங்களுக்கு மேல் நடித்து வரும் மனோபாலா சினிமாத்துறையில் நல்ல ஒரு பொருப்பில் பணியாற்றியும் வருகிறார்.

இந்நிலையில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மனோபாலா, சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். அப்படி படுத்திருந்தபடி இருக்குமாறு எடுத்த புகைப்படத்தை பார்த்து, கொரானாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வந்தனர்.

இதை கண்டு மனோபாலா, ‘என் அன்பு மக்களே நான் ஏதோ ஒரு photoவை போட அது இந்த லெவலுக்கு போகும்னு தெரியல..நான் நல்லாதான் இருக்கேன்..ஒண்ணுமில்லை அன்பு காட்டிய ( அப்படிதான் சொல்லணும்) அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்.. என்று கூறியுள்ளார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்