எல்லாம் பிக்பாஸ் தான் காரணம்! லொஸ்லியாவுக்கு இனிமே படம் தான் முக்கியமாம்

losliya biggboss tharshan
By Edward Mar 29, 2022 06:55 PM GMT
Report

தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து எப்படியாவது எதாவதொரு கதாபாத்திரம் கிடைத்து நடித்துவிட வேண்டும் என்ற கணவோடு வருபவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் வெளிநாட்டில் இருந்து கூட சின்னத்திரை தொலைக்காட்சிகள் கலந்து கொண்டு பிரபலமாகுவார்கள்.

லொஸ்லியா அறிமுகம்:-

அப்படி இலங்கை தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி, அதன்பின் நடிக்கும் ஆசையில் சென்னை வந்த ஈழப்பெண் தான் லொஸ்லியா. தன் நண்பர்கள் உதவியுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி வாய்ப்பினை பெற்று வீட்டிற்குள் சென்றார் லொஸ்லியா.

பிக்பாஸ் வரவேற்பு:-

நிகழ்ச்சியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த லொஸ்லியா தன் அழகான தமிழ் பேசும் குரலால் மக்களை ஈர்த்து வந்தார். காதல் சர்ச்சையில் சிக்கி தன் தந்தையின் கோபத்தை சந்தித்தார்.

அதன்பின் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற கணவோடு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சில படங்களில் கமிட்டாகினார். நிகழ்ச்சியை விட்டு வெளியேறி சில மாதங்களில் லொஸ்லியாவின் தந்தி மரணமடைந்தார். தந்தை மரணத்திற்கு பிறகு சில காலம் குடும்பத்துடன் இருந்துவிட்டு மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

திரைப்பயணம்:-

பிரண்ட்ஷிப் படத்திற்கு தற்போது கூகுள் குட்டப்பா படத்தில் பிக்பாஸ் நடிகர் தர்ஷனுடன் ஜோடிபோட்டு நடித்துள்ளார். அப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் லாஸ்லியா சினிஉலகத்திற்க்கு அளித்திருக்கும் பேட்டியில் பல விஷயங்கள் பற்றி ஓப்பனாக பேசி இருக்கிறார்.

முன்பு இருந்த chubby லாஸ்லியாவை தான் ரசிகர்களுக்கு அதிகம் பிடித்த நிலையில் அவர் ஏன் ஒல்லி ஆனார் என கேட்டதற்கு, "எனக்கு Health Issues இருந்தது, அதனால் தான் எடையை குறைக்க வேண்டி இருந்தது. முன்பு நான் ஒல்லியாக தான் இருந்தேன். பிக் பாஸ் வரும்போது எனக்கு weight போட்டிருந்தது. தற்போது மீண்டும் ஒல்லியாகி இருக்கிறேன்.

"Screen-ல் பெரிதாக தெரிவேன். சினிமா தான் என் துறை என முடிவெடுத்துவிட்டேன். அதற்காக தான் கடின உழைப்பை போட விரும்புகிறேன். இது இரண்டும் தான் நான் ஒல்லியாக காரணம்" என் லாஸ்லியா கூறி இருக்கிறார்.