பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்கோங்க.. விஜய் சேதுபதி காலில் விழுந்த சரவணன்..
Saravanan
Vijay Sethupathi
Vetrimaaran
Gossip Today
By Jai
இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில், நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கத்தில் நடிகர் விமல், சரவணன், ஆடுகளம் ஜெயபாலன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிகைகள் நடித்து வெளியாகவுள்ள படம் Sir.
இப்படத்தின் டிரைலர் லான்ச் மற்றும் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி இன்று நடந்துள்ளது. நிகழ்ச்சிக்கு நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக வந்து படக்குழுவினரை பாராட்டி இருக்கிறார்.

சரவணனை பார்த்து, சார் நீங்க ரொம்ப நடிச்சீங்க என்று விஜய் சேதுபதி கூறியிருக்கிறார். உடனே சரவணன் விஜய் சேதிபதி காலில் விழுந்துள்ளார். அதற்கு விஜய் சேதுபதி, பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்கோங்க சார் என்று சிரித்தபடி கூறியிருக்கிறார்.
அடுத்த படத்தில் விஜய் சேதுபதிக்கு அப்பாவாக நான் நடிக்கிறேன், அதனால் தான் பெரிய மனுஷத்தனமாக நடிங்க என்று சொல்லி இருப்பதாக சரவணன் காமெடியாக கூறியிருக்கிறார்.