லட்சத்துக்கு நடிச்சு என்ன பிரயோஜனம்.. வாய்ப்பில்லாமல் திண்டாடும் நடிகை பிரியா பவானி..

Priya Bhavani Shankar Gossip Today
By Edward Oct 03, 2022 07:58 AM GMT
Report

செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பின் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். நடித்த ஒரே ஒரு சீரியல் மூலம் மேயாதமான், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களின் வாய்ப்பு கிடைத்து வெள்ளித்திரை நடிகையாக மாறினார்.

பின் மான்ஸ்டர், மாஃபியா, ஹாஸ்டல், ஓ மனப்பெண்ணே, யானை போன்ற படங்களில் நடித்தும் வந்தார். தற்போது திருச்சிற்றம்பலம், பொம்மை, அகிலன், ருத்ரன் உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.

பிரியா பவானி சங்கர் பல ஆண்டுகளாக காதலித்து வரும் தன் காதலருடன் ஊர்சுற்றி வந்தார். தற்போது வெளிநாட்டுக்கு காதலரை அழைத்து சென்றுள்ளார். கிட்டத்தட்ட ஒரு மாதமாக வெளிநாட்டில் செட்டிலாகியே விட்டார்.

இதற்கு காரணம் படவாய்ப்புகள் இருந்தும் மார்க்கெட் இல்லாமல் இருந்து வருகிறார். சில நிமிடங்கள் மட்டுமே வரும் ரோலில் நடித்து வருவதால் போதிய சம்பளமும் அவரால் வாங்கமுடியவில்லை.

இதனால் தான் காதலருடன் கிடைத்த காசை வைத்துக்கொண்டு வெளிநாட்டில் சுற்றி வருகிறார். மன உளைச்சலில் இருந்தாலும் வெளியில் காட்டாத பிரியா பவானி இனிமேல் முக்கிய ரோலில் நடிக்க முடிவெடுத்துவிட்டாராம்.