குக் வித் கோமாளி சீசன் 6 எப்போ தெரியுமா!! CWC பிரபலம் கொடுத்த தகவல்..
குக் வித் கோமாளி
விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. கடந்த ஆண்டு குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியை செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கநாஜ் தலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் போது மணிமேகலைக்கும் பிரியங்காவிற்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் மணிமேகலை தொகுத்து வழங்குவதில் இருந்து பாதியிலேயே விலகினார்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5ன் டைட்டில் வின்னராக பிரியங்கா தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
குக் வித் கோமாளி சீசன் 5 முடிந்து கிட்டத்தட்ட 6 மாதத்திற்கும் மேலாகியுள்ள நிலையில் சில காரணங்களால் அடுத்த சீசன் எப்போது என்ற தகவல் தாமதமாகியது.
இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது என்ற தகவலை பிரபல நடிகையும் குக் வித் கோமாளி சீசன் 2 ரன்னர் அப் இடத்தை பிடித்த ஷகீலா பகிர்ந்துள்ளார்.
சீசன் 6 எப்போ
அவர் அளித்த பேட்டியொன்றில், CWC 6 வருது, ஆமாம், ஏப்ரல் இறுதி அல்லது மே முதல் வாரத்தில் ஆரம்பமாகும். நான் மாதம்பட்டி ரங்கநாஜை, கேட்ரிங் விஷயத்திற்காக சமீபத்தில் பேசினேன்.
அப்போது அவர்கிட்ட குக் வித் கோமாளி 6 எப்போன்னு கேட்டேன், அவர் தான் சொன்னாரு என்று ஷகீலா தெரிவித்துள்ளார். சீசன் 6ல் மணிமேகலைக்கு பதில் யார் விஜே ரக்ஷனுடன் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.