40 வயதாகியும் திருமணம் செய்யாதது ஏன்!! சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ் கூறிய உண்மை..

Serials Shruthi Raj Tamil TV Serials
By Edward May 19, 2023 12:00 PM GMT
Report

மலையாளத்தில் இருந்து தமிழில் அறிமுகமாகி பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் தான் நடிகை ஸ்ருதி ராஜ். நடிகர் விஜய்யின் மாண்புமிகு மாணவன் படத்தில் முக்கிய ரோலில் நடித்த ஸ்ருதி அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வந்தார்.

அதன்பின் கோலங்கள், தென்றல், ஆபீஸ், அன்னக்கொடியும் ஐந்துபெண்களும், அழகு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வந்தார். தற்போது ஒருசில சீரியல்களில் நடித்து வரும் ஸ்ருதி ராஜ் 40 வயதை தாண்டியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.

40 வயதாகியும் திருமணம் செய்யாதது ஏன்!! சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ் கூறிய உண்மை.. | When Will Serial Actress Shruthiraj Get Married

இதற்கு காரணம் என்ன என்று சமீபத்தில் ஸ்ருதி ராஜ் பகிர்ந்துள்ளார். என் வாழ்க்கையில் எந்த விசயத்தையும் திட்டமிட்டு செய்வது கிடையாது.

அப்படி திட்டமிட்டு செய்த அனைத்தும் சரியாக நடப்பது இல்லை. அதனால் தான், திருமணம் குறித்த எதுவும் பெரியதாக யோசிக்காமல் எந்த முடிவையும் எடுக்கவில்லை.

என் திருமணம் பற்றி என் வீட்டில் உள்ளவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்றும் அதுபற்றி எந்த கவலையும் இல்லாம இருப்பதாகவும் ஸ்ருதி ராஜ் தெரிவித்துள்ளார். என்னதான் 40 வயதை கடந்தாலும் இன்னும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அழகில் ரசிகர்களை ஈர்த்து வருகிறார் ஸ்ருதி ராஜ்.