என்னம்மா த்ரிஷா.. நயன் திருமணத்தை வைத்து வம்பிழுக்கும் ப்ளூ சட்டை மாறன்

Trisha
By Parthiban.A Jun 11, 2022 01:20 PM GMT
Report

நீண்ட காலமாக காதலித்து வந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தற்போது திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். நீண்டகாலமாக நயனிடம் ரசிகர்கள் கேட்டுவந்த 'திருமணம் எப்போது?' என்ற கேள்வியை இனி யாரும் அவரிடம் கேட்க முடியாது.

 இந்நிலையில் தற்போது அதிகம் வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாத பிரபலங்கள் பக்கம் அந்த கேள்வி திரும்ப தொடங்கி இருக்கிறது.

அப்படி த்ரிஷாவிடம் கேள்வி கேட்டு மீம் வெளியிட்டு இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். ட்விட்டரில் அவர் போட்டிருக்கும் மீம் பதிவில் "என்னம்மா த்ரிஷா நீ எப்ப கல்யாண சாப்பாடு போட போற.. வயசாகிட்டே போதா இல்லையா" என வடிவேலு கேட்பது போல காட்டப்பட்டு இருக்கிறது.