யாருக்கு தான் துரோகம் நடக்கல..டி இமானுக்கு இன்னும் ரணம் மனசுல இருக்கோ...

D Imman Gossip Today
By Jai Jul 31, 2026 07:15 AM GMT
Report

டி இமான்

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வருபவர் தான் டி இமான். இசையால் மட்டுமல்ல, உணர்வுகளை நேரடியாக வெளிபடுத்தும் குரலையும் கொண்டவர். பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்த டி இமான், விஸ்வாசம் படத்திற்கான தேசிய விருதையும் பெற்றார்.

இந்நிலையில் சோசியல் மீடியாகளில் அதிகம் பேசப்பட்டு வரும் துரோகம் குறித்த கேள்விக்கும் தேசிய விருது தொடர்பான சர்ச்சைக்கும் பதிலளித்துள்ளார். வாழ்க்கையில் துரோகம் நடந்ததாக கடந்த சில ஆண்டுகளாக பரவலாக பேசப்பட்டும் வரும் நிலையில் அதுகுறித்த கேள்வி கேட்கப்பட்டது.

யாருக்கு தான் துரோகம் நடக்கல..டி இமானுக்கு இன்னும் ரணம் மனசுல இருக்கோ... | Who Hasnt Faced Betrayal D Imman Breaks Silence

துரோகம்

அதற்கு அவர், வாழ்க்கையில் யாருக்குத்தான் துரோகம் நடக்கவில்லை, அது எல்லார் வாழ்க்கையிலும் ஒருக்கட்டத்தில் நடக்கூடிய ஒன்றுதான். நிறம் படத்தில் துரோகம் குறித்து பா. விஜய் எழுதியிருக்கும் பாடல், பலருடைய வாழ்க்கையோடு பொருந்தும் வகையில் இருப்பதாக எனக்கு தோன்றியது என்று கூறியிருக்கிறார். தன் சொந்த வாழ்க்கையில் நடந்த துரோகத்தை நினைத்து இமான் மறைமுகமாக நினைவூட்டுகிறாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் பேசிய இமான், இந்த படம், அந்த படம் என்று மட்டும் பார்க்காமல், தேசியளவில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்றால், அதை ஒட்டுமொத்த தமிழர்களின் பெருமையாகவே பார்க்க வேண்டும். ஒரு விருது சில நேரங்கலில் முழுமையாக சரியான படைப்புக்கு கிடைக்கலாம், சில நேரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் ஒரு கலைஞர் எங்கிருந்து வந்தார், அந்த இடத்தை அடைய எவ்வளவு உழைத்தார் என்பதையும் பார்க்க வேண்டியது அவசியம். அந்த உழைப்புக்கும் ஒரு மதிப்பு இருக்கிறது என்று பேசியுள்ளார்.