நாக சைதன்யாவுக்கு இந்த நடிகர் மாமா முறையா? ஆனால் தம்பிக்கு கிடையாதாம்..

tollywood venkatesh nagachaitanya akkineni lakshmidaggubati
By Edward Nov 13, 2021 12:30 PM GMT
Report

தெலுங்கு சினிமாவில் முன்னணி மற்றும் மூத்த நடிகராக திகழ்ந்து வருபவர் நாகார்ஜுனா. தமிழ், தெலுங்கு என மூன்னணி நடிகராக இருந்து தற்போது இந்த வயதில் படங்களில் நடித்து வருகிறார். லட்சுமி டக்குபடி என்பவரை 1984 திருமணம் செய்து 1990ல் விவாகரத்து பெற்றார்.

அவர்களுக்கு பிறந்த மகன் தான் நடிகர் நாக சைதன்யா. பின் இரு ஆண்டுகளில் நடிகை அமலாவை திருமணம் செய்து அகில் அக்கினேனியை பெற்று தற்போது நடிகராக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் வெங்கடேஷ் அவரது இணையதளப்பக்கத்தில் சமீபத்தில் காதல் பற்றிய அறிவுரை கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

இதை சமந்தா நாக சைதன்யா விவாகரத்துக்கு மறைமுகமாக தெரிவித்து வருகிறாரோ என்று அக்கடதேசத்தில் கசிய துவங்கியது. அப்படி அவர் அறிவுரை கூற என்ன சம்பந்தம் இருக்கிறது என்று தமிழ் ரசிகர்கள் கேட்கலாம்.

நாகர்ஜுனாவின் முதல் மனைவி லட்சுமி டக்குபடியின் சகோதரர் தான் நடிகர் வெங்கடேஷ் டக்குபடி. அதாவது நடிகர் நாக சைதன்யாவின் தாய் மாமா உறவு இருப்பதால் இப்படியான கருத்துக்களை இருவருக்கும் மறைமுகமாக கூறி வரலாம் என்று குறிப்பிட்டு வருகிறார்கள்.