இரண்டாம் திருமணத்தை மூடி மறைத்த அமலா பால்! எல்லாம் இதற்காகத்தானா

Amala Paul
By Parthiban.A Sep 09, 2022 10:30 AM GMT
Report

நடிகை அமலா பால் இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டாலும் சில வருடங்களில் பிரச்சனை காரணமாக விவாகரத்து செய்துவிட்டார். திருமணத்திற்கு பிறகு அவர் நடிக்கவே கூடாது என அவரது குடும்பத்தினர் கண்டிஷன் போட்ட நிலையில் அதையும் மீறி அமலா பால் சில படங்களில் நடித்தது தான் பிரச்சனைக்கு காரணம் என அப்போது சொல்லப்பட்டது.

இந்நிலையில் தற்போது அமலா பால் பஞ்சாபி பாடகர் பவீந்தர் சிங் மீது போலீசில் பாலியல் புகார் அளித்து இருந்தார். அவர் போட்டோக்களை வைத்து மிரட்டுகிறார் என்றும் புகாரில் தெரிவித்து இருந்தார். அதனை தொடர்ந்து பவீந்தர் சிங்கை போலீசார் கைது செய்தனர்.

அதன் பின் பவீந்தர் சிங் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். அதில் அமலா பாலுக்கும் தனக்கும் 2017ல் திருமணம் நடந்தது என்றும், அதற்க்கான ஆதாரங்களை கோர்ட்டில் சமர்ப்பித்து இருக்கிறார். அதற்கு பிறகு தான் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி இருக்கிறது.

அமலா பால் இரண்டாம் திருமணத்தை ஏன் மறைத்தார் என்கிற விமர்சனம் எழுந்து இருக்கிறது. திருமணத்தை அறிவித்தால் பட வாய்ப்புகள் எதுவும் வராது என்பதால் தான் இப்படி செய்தாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

GalleryGallery