இப்படியொரு பிளான் போட்ட தனுஷ்! மகன்களுடன் அமெரிக்காவுக்கு பறக்க இதான் காரணம்..

Dhanush Aishwarya Rajinikanth
By Edward Jul 26, 2022 12:10 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகை தனுஷ். சமீபத்தில் ஹாலிவுட் படமான தி கிரே மேன் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். படத்தில் கடைசி 20 நிமிடம் கிளைமேக்ஸ் காட்சிகள் என்று சிறு நேர நடிகராக நடித்துள்ளார்.

இப்படத்தின் பிரமோஷனுக்காக கடந்த சில வாரங்களாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தங்கியிருந்தார். அந்நிகழ்ச்சியின் போது தன் மகன்கள் யாத்ரா, லிங்கா இருவரையும் அழைத்துகொண்டு போட்டோஷூட்டும் எடுத்து மகிழ்ந்தார்.

விவாகரத்துக்கு பின் மகன்களுடன் அமெரிக்காவுக்கு பறக்க என்ன காரணம் என்று பலர் கேள்வி கேட்டு வந்துள்ளனர். அதற்கு என்ன காரணம் என்று தனுஷ் கூறியுள்ளாராம். என் மகன்களுக்கு நான் என்ன செய்தாலும் பிடிக்கும்.

என்னை ட்ரோல் செய்யும் போது கூட எனக்கு ஆதரவாக பாசிட்டிங் கருத்துக்களை என்னிடம் கூறுவார்கள். அதேபோல், அவர்கள் தான் என் பிடிப்பு, எனக்கு, வாழ்க்கையை உணர்த்தியவர்களும் அவர்கள் தான் என்று கூறியுள்ளார்.

தி கிரே மேன் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் அவர்கள் பங்கேற்றது எனக்கு மகிழ்ச்சி. அதில் பங்கேற்றதை விட எனக்கு பெரிய விசயம் என்ன இருக்க முடியும் என்று நெகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டுள்ளார்.