அந்த படத்துல ஏண்டா நடிச்சதே தப்பு!! நடிகை நயன்தாரா ஓபன் டாக்..
நடிகை நயன்தாரா
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட்டிலும் டாப் நடிகையாக ஜொலித்து வருபவர் தான் நடிகை நயன்தாரா. தவான் படத்தின் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்தப்பின், தற்போது பாலிவுட் ஸ்டார் நடிகர் சல்மான் கான் படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

நயன்தாராவிற்கு ஆரம்பத்தில் மிகப்பெரிய படமாக மாறியதுதான் கஜினி படம். ஆனால் நயன் தாராவே, ஏண்டா அந்த படத்தில் நடிச்சோம் என்று ஃபீல் பண்ண வைத்த படமும் கஜினி படம் தான்.
கஜினி படம்
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின் நடித்த கஜினி படத்தில் சித்ரா என்ற ரோலில் நயன் தாரா நடித்திருப்பார். அப்படத்தை படத்தை பற்றி நயன் தாரா ஒரு பேட்டியொன்றில் ஓபனாக பேசியிருக்கிறார். கஜினி படத்தில் நடித்தது, தன்னுடைய கரியரில் ஏற்பட்ட ஒரு தவறான முடிவு.

அசின் நடித்த கல்பனா ரோலுக்கு இணையாக தன்னுடைய ரோல் முக்கியத்துவம் இருக்கும் என்று எதிர்பார்த்தாகவும், ஆனால் படம் வெளியானப்பின் எதிர்பார்ப்பு நிறைவேறாததால் ஏமாற்றமடைந்ததாகவும், அதன்பின் கதை தேர்வுகளில் மேலும் கவனமாக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியதாகவும் நயன் தாரா தெரிவித்துள்ளார்.