அனிருதாவை காதலித்து திருமணம் செய்ய இதுதான் காரணம்!! சம்யுக்தா சொன்ன ரகசியம்..
சம்யுக்தா
நடிகை சம்யுக்தா ஷானுக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்துக்கும் சில நாட்களுக்கு முன் சிம்பிளாக திருமணம் நடைபெற்றது. சம்யுக்தாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் விவாகரத்து பெற்றவர்.

அதேபோல் அனிருதாவும் திருமணமாகி விவாகத்து பெற்றவர். 2012ல் மாடல் நடிகையான ஆர்த்தி என்பவரை அனிருதா ஸ்ரீகாந்த் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகிய இரு வருடங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஆர்த்தி - அனிருதா விவாகரத்து செய்து பிரிந்தனர்.
இந்நிலையில், அனிருதாவை ஏன் காதலிக்க ஆரம்பித்தேன் என்று சம்யுக்தா தெரிவித்துள்ளார்.
அனிருதா ஏன்
பேட்டியொன்றில் பேசிய சம்யுக்தா, வாழ்க்கையை ஈஸியாக எடுத்துக்கொண்டு, வாழ்க்கையை சிரித்துக்கொண்டே ரன் செய்யும் மாதிரியான ஒருவர் வாழ்க்கை துணையாக வந்தால் அது நன்றாக இருக்கும். அதுதான் உலகத்தின் சிறந்த இடமாகவும் இருக்கும்.
அப்படித்தான் அனிருதா மீதான காதல் உருவானது. ஒரு பெர்சனல் பிரச்சனையின் போது அதுதான் நமது மூளையை ஆக்கிரமிக்கும். ஏன் இப்படியானது அப்படி ஆகவில்லை என்று இருக்கும். வாழ்க்கையே ஒரு வட்டம் தானே, அதையெல்லாம் கடந்துதான் போகவேண்டும் என்று சம்யுக்தா தெரிவித்துள்ளார்.