14 வருடமாக விஜய்யை ஒதுக்கி வரும் திரிஷா! மனைவி போட்ட பிளான் தானா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் ஆரம்பத்தில் தான் நடித்த நடிகைகளுடன் நெருக்கமாக நடித்து சர்ச்சையில் சிக்கி வந்தார். சமீபத்தில் கூட பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே உதட்டினை கிள்ளும் புகைப்படம் இணையத்தில் வெளியாகிது.
விஜய் அதேபோல் பல நடிகைகளுக்கும் இப்படியான ஒரு கிள்ளை செய்துள்ளார் என்ற லிஸ்ட் வைரலானது. இதைதொடர்ந்து பீஸ்ட் படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடல் வெளியாக விஜய்யினை வெறுப்பவர்கள் விஜய் பற்றி சர்ச்சை விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
அப்படி கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி போன்ற படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்திருப்பார். இவர்களின் காம்போ முதல் படத்திலேயே பெரிய வரவேற்பு பெற்று கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட்டானது.
இது ஒரு கட்டத்தில் காதல் கிசுகிசுவாக மாறியது. இதை கேள்விப்பட்ட விஜய் மனைவி சங்கீதா விஜய்க்கு ஒரு கண்டீசன் போட்டுள்ளார். இனிமேல் உங்கள் படத்தின் ஹீரோயினை நான் தான் முடிவெடுப்பேன் என்றும் இனிமேல் திரிஷாவுடன் நடிக்கக்கூடாது என்றும் கூறியிருக்கிறார்.
அப்படி நடந்த சம்பவம், 14 வருடமாகியும் இருவரும் சேர்ந்து படமும் பண்ணுவதில்லை, பார்த்து பேசுவதும் இல்லையாம். இதைத்தான் விஜய் ஹேட்டர்கள் கலாய்த்து திரிஷாவுடன் சேராது ஏன் என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.