கணவரின் அருவருப்பான நடிப்பால் தியேட்டரில் கன்னத்தில் பளார் விட்ட நடிகை!! உண்மையை உடைத்த பிரபல நடிகர்
இயக்குனர் வெற்றிமாறன் படங்கள் என்றாலே சிறு கதாபாத்திரம் என்றாலும் அதற்காக பல விசயங்கள் செய்து கச்சிதமாக பொருந்தும் வகையில் அந்த ரோலை எடுத்துக்காட்டுவார்.
அப்படி தான் சமீபத்தில் வெளியான விடுதலை படத்திலும் வெற்றிமாறன் பல அருவருப்பான சம்பவங்களை செய்திருக்கிறார் என்று அப்படத்தில் நடித்த நடிகர் சேத்தன் கூறியிருக்கிறார்.

சூரி, கெளதம் வாசுதேவ் மேனன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. அனைத்து காட்சிகளும் ரியலாக இருக்க வெற்றிமாறன், காடு, மலை, கிராமம் என்று பல ஆபத்தான காட்சிகளை அமைத்திருக்கிறார்.
அந்த வகையில் போலிஸாக நடித்த நடிகர் சேத்தனையும் அப்படியே உருவாக்கும் வண்ணம் வில்லத்தனத்தை ரியலாக பார்க்கும் ஒரு போலிஸ் அதிகாரியாக அமைத்திருந்தார் வெற்றிமாறன்.
ஹிட்லர் போன்ற மூக்கின் கீழ் சின்ன மீசை, முகத்தில் வில்லத்தனம் நிறைந்த லுக் என்று கனகட்சிதமாக இருந்துள்ளார். இதுகுறித்து பேட்டியின்றில் சேத்தன் ஒரு விசயத்தை கூறியிருக்கிறார்.

என்னுடைய கதாபாத்திரத்தை பார்த்து என் மனைவி நடிகை தேவதர்ஷினி தியேட்டருக்கு வாசலில் இருந்தபடி கன்னத்தில் பளார் விட்டார் என்றும் அவரது தோழிகள் போன் செய்து சேத்தனுடன் இத்தனை வருடங்கள் எப்படி வாழ்ந்தாய் என்று திட்டியும் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
அப்படியொரு கதாபாத்திரத்தை வெற்றிமாறன் விடுதலை படத்தில் செதுக்கியதாக உண்மையை கூறியிருக்கிறார் நடிகர் சேத்தன்.