ரயில் மோதி மனைவி மரணம்!! பிக்பாஸ் பிரபலத்தின் அறியப்படாத சோகப்பக்கங்கள்..
மோகன் வைத்யா
தமிழ் சினிமாவில் இசை கலைஞராக திகழ்ந்து வந்த மோகன் வைத்யா, பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானார். சமீபத்தில் மார்க் ஆண்டனி படத்திலும் நடித்திருந்தார். அவர் பற்றிய ஒரு சில விஷயங்கள் பகிரப்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மோகன் வைத்யாவின் மனைவி காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத ஒரு மாற்றுத்திறனாளி.
இத்தம்பதிக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஒருநாள் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் வரும் சத்தம் கேட்க முடியாமல் சென்றபோது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார் மோகன் வைத்யாவின் மனைவி.
தனது அத்தை மகளை திருமணம் செய்த மோகன் தான் இல்லற வாழ்க்கை சந்தோஷமாக இருந்த நேரத்தில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
ரயில்வேயில் பணிபுரிந்த சமயத்தில் தான் ஒருநாள் படியேற தன்னால் முடியவில்லை என்று ரயில்வே ட்ராக்கை கடந்து அலுவலகம் சென்றுள்ளார் அவரின் மனைவி.
அப்போது தான் இந்த துயர சம்பவம் நடந்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்ததாகவும் அப்போது மனைவி 3 மாதம் கர்ப்பமாக இருந்ததாகவும், சமீபத்தில் மோகன் வைத்யா கொடுத்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
3 வயதில் தன் அம்மாவை இழந்த அவரது மகனும் காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாம். அம்மாவின் ரயில்வே வேலையில் பணிபுரிந்து சிறுவயதில் தன்னுடன் படித்த பெண்னை காதலித்து திருமணம் செய்து கொண்டா மோகன் வைத்யாவின் மகன்.
திருமணம் செய்து கொண்ட அப்பெண்ணும் ஒரு மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.