தான் பட்ட அவமானத்திற்கு பதிலடி கொடுத்த நடிகர் சூரி!! மனைவிக்கே அதிர்ச்சியை கொடுத்த சம்பவம்..

Soori viduthalai
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தின் சிறு கதாபாத்திரத்தில் நடித்து பரோடா சூரி என்ற பெயரை பெற்றவர் நடிகர் சூரி. அதன்பின் தன் வளர்ச்சியால் சிறு ரோலில் நடித்து பின் முன்னணி காமெடி நடிகர் என்ற அந்தஸ்த்தை பெற்றார்.

முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரின் படங்களில் காமெடியனாக நடித்த சூரி, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

தான் பட்ட அவமானத்திற்கு பதிலடி கொடுத்த நடிகர் சூரி!! மனைவிக்கே அதிர்ச்சியை கொடுத்த சம்பவம்.. | Wife Was Surprised To See The Action Of Soori

இதற்கு முன் பல அவமானங்களை சந்தித்து வந்துள்ளேன் என்று கூறி சூரி, ஒரு இடத்தில் அவமானப்பட்டதை சவாலாக மாற்றி அதை நிறைவேற்றியிருக்கும் சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. சூரி தனக்கென ஒரு வீடு வாங்க வேண்டும் என்று ஒரு பிளாட்டை வாங்க முடிவெடுத்துள்ளார்.

எந்த இடத்தில் வாங்க வேண்டும் என்று நினைத்தபோது, தான் ஆடிஷனுக்காக சென்று மயங்கி விழுந்து அவமானப்பட்ட சாலிகிராமத்தில் இருக்கும் ஒரு பிளாட்டைத்தான் வாங்க வேண்டும் என்ற கனவு இருந்துள்ளதாம். அதை எப்படியாவது வாங்க வேண்டும் என்ற ஒற்றைகாலில் நின்ற சூரியை, பிளாட் உரிமையாளரிடம் விலையை குறைத்து கொள்ளுமாறி கேளுங்கள் என்று சூரி மனைவி கேட்டுள்ளார்.

தான் பட்ட அவமானத்திற்கு பதிலடி கொடுத்த நடிகர் சூரி!! மனைவிக்கே அதிர்ச்சியை கொடுத்த சம்பவம்.. | Wife Was Surprised To See The Action Of Soori

ஆனால் சூரி, 2, 3 லட்சம் அதிகமானாலும் பரவாயில்லை என்று அவமானப்பட்ட இடம் தான் எனக்கு வேண்டும் என்று அந்த பிளாட்டை வாங்கி குடியேறியிருக்கிறார்.

அதேபோல், ஒரு பிளாட் முன் சூரி தன் மகளுடன் புகைப்படம் எடுத்த போது கெட்ட வார்த்தைகளால் திட்டியிருக்கிறார்கள். அதன்பின் சூரி வளர்ந்த போது அந்த இடம் விலைக்கு வந்துள்ளது. அதையும் வாங்கி அந்த பிளாட்டை தன் அலுவலகமாக மாற்றியிருக்கிறார் நடிகர் சூரி.