சிவனேன்னு போய்ட்டு இருந்த? உசுப்பெற்றிய நபரிடம் ஆக்ரோஷத்தை காட்டிய காட்டு யானை..

Coimbatore Viral Video Trending Videos Elephant
By Edward Jun 15, 2022 08:54 AM GMT
Report

காட்டுப்பகுதியை சூரையாடி காடுகளை அழித்து அங்கு வீடுகளை கட்டியதால் விலங்குகள் நகருக்குள் வருவது சாதாரணமாகிவிட்டது. அப்படி பல இடங்களில் காட்டு விலங்குகள் குடியிருப்பு பகுதியில் புகுந்து நாசம் விளைவித்து வரும் வீடியோக்களும் வைரலாகியது.

அப்படி கோவை பேரூர் அருகே உள்ள தீத்திபாளையம் கிராமத்தில் ஒரு வார காலமாக 6 யானைகள் கொண்ட கூட்டம் சுற்றி வருகிறது. இதனால் யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்று அங்குள்ள வீடுகளை சேதப்படுத்தி வந்தன. இதனால் யானைகளை விரட்ட வனத்துறையினர் தொடர்ந்து முயற்சிகள் செய்து வந்தனர்.

சில நாட்களுக்கு முன் ஜேசிபி-யை வைத்து யானை விரட்டியும் காட்டுக்குள் செல்லாமல் இருந்த ஒரு யானை, குடியிருப்பு பகுதியில் ஒரு நபரை தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அங்கிருந்தவர்கள் யானை விரட்ட கத்தவே அந்த நபர் சில காயங்களுடன் உயிர்த்தப்பியுள்ளார்.