இதுக்கு பேருதான் ரோஷம்! தொகுப்பாளரை மேடையில் அடித்ததற்காக வில் ஸ்மித் செய்த செயல்..
கடந்த வாரம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை கொடுத்த சம்பவம் ஆஸ்கர் விருது விழாவில் நடந்த ஒரு நிகழ்வுதான். வருடம் வருடம் நடைபெறும் ஆஸ்கர் விழாவின் 94வது நிகழ்ச்சி கடந்த வாரம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. முன்னணி ஹாலிவுட் நட்சந்திரங்கள் சூழ விருது விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியை பிரபல நகைச்சுவை மேடைப்பேச்சாளர் கிறிஸ் ராக் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் போது கிறிஸ் ராக் நடிகர் வில் ஸ்மித் மனைவி ஜடாவின் முடியை வைத்து கிண்டல் செய்து பேசினார். இதனால் பொருமை இழந்த வில் ஸ்மீத் மேடையில் ஏறி கிறிஸ் ராக் கன்னத்தில் ஓங்கி அறைந்து மேடையை விட்டு இறங்கினார்.
யாரும் எதிர்ப்பார்க்காத இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. மேடையில் இருந்து இறங்கியதும் என் மனைவி பெயரை கூறாதே வாயை மூடு என்று கத்தியுள்ளார். இந்த நிகழ்வு வீடியோவாக இணையத்தில் வைரலானது.
கிங் ரிச்சர்ட் படத்திற்காக சிறந்த நடிகர் விருதினை வாங்கியப்பின் வில் ஸ்மித் தான் நடந்து கொண்டதற்காக நிகழ்ச்சி குழு, கிறிஸ் ராக், சக நடிகர்களிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் ஆஸ்கர் விருது விழா நடத்தும் அமைப்பில் பல ஆண்டுகளாக வில் ஸ்மித் பணியாற்றி இருந்தார். தற்போது இந்த சம்பவத்தால் அந்த அமைப்பில் இருந்து பதவி விலகியுள்ளார். மனதாரா வில் ஸ்மித்தின் முடிவை ஏற்றனர் ஆஸ்கர் அக்காடமி அமைப்பினர். இதுதான் உண்மையான ரோஷம் என்று வில் ஸ்மித்தை பலர் பாராட்டி வருகிறார்கள்.