மனைவியை கிண்டல் செய்த தொகுப்பாளர்! ஆஸ்கர் விருது விழாவில் பளார் விட்ட வில் ஸ்மித்..

willsmith chrisrock OSCAR2022 kingrichard OSCAR
By Edward Mar 28, 2022 07:28 AM GMT
Report

உலகில் சினிமாவில் வெளியாகும் படைப்புகளுக்கும் கொடுக்கப்படும் உயர்ந்த விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. பல வருடங்களாக கொடுக்கப்பட்ட இந்த விருது விழா இந்த ஆண்டு 94வது ஆஸ்கர் விழாவாக நடைபெற்றது.

வில் ஸ்மித் படம்:-

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் கடந்த ஆண்டு வெளியான கிங் ரிச்சர்ட் என்ற் படத்திற்காக சிறந்த நடிகர் என்ற விருதினை பெற்றுள்ளார். 2002ஆம் ஆண்டு அலி திரைப்படமும் பர்சூட் ஆஃப் ஹேப்பினஸ் படமும் நாமினேட் ஆகியும் விருது பெறாமல் இருந்தார் வில் ஸ்மித். தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு அவர் ஆஸ்கார் விருதினை வாங்கியுள்ளார்.

தொகுப்பாளருக்கு பளார் விட்ட ஸ்மித்:-

விருது வாங்குவதற்கு முன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வண்டஹ் கிறிஸ் ராக் என்பவர் வில் ஸ்மித்தின் மனைவியின் ஹேர் ஸ்டைலை கேலி செய்யும் விதமாக பேசினார். உடனே வில் ஸ்மித் மேடைக்கு வந்து என் மனைவி பெயரை சொல்லாத என்று கூறி அனைவரின் முன்னிலையில் பளார் விட்டு சென்றார்.

இதை காமெடியாக எடுத்துக்கொண்ட கிறிஸ் ராக் கூறிய வார்த்தைக்கு என்னுடைய மனைவி பெயரை கூறாதே வாயை மூடு என்று கத்தியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.