அருவருப்பாக இருக்கு..உங்க குடும்பத்துல நடந்தா ஏத்துப்பீங்களாடா!! டியூட் படத்தை விமர்சித்த இயக்குநர்..
டியூட்
இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சரத்குமார் உள்ளிட்ட பலர் நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸான படம் தான் டியூட்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சாய் அபியங்கர் இசையில் வெளியான இப்படம் 2வது வாரத்தில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது.
என்னதான் படம் வசூலில் பட்டையை கிளப்பி வந்தாலும் சிலர் படத்தினை மோசமான விமர்சித்தும் வருகிறார்கள். அப்படி பிரபல இயக்குநர் மோகன் ஜி டியூட் படத்தினை விமர்சித்திருக்கிறார்.

இயக்குநர் மோகன் ஜி
அதில், படத்தில் ஆணவக்கொலை பற்றி பேசியிருப்பது வரவேற்கத்தக்கது தான், ஆனால் புது காதலருக்கு பிறந்த குழந்தைக்கு இன்னொருத்தர் இனிஷியல் போட்டு, அவங்க ரெண்டு பேரும் ஒன்னா தங்க, அவர் வீட்டிலேயே அனுமதி அளிப்பதை எல்லாம் பார்க்க அருவருப்பாக இருக்கிறது.
இப்படியொரு விஷயத்தை இயக்குநர் ஞாயப்படுத்தி இருப்பதும் தப்பு. இந்த படம் அடுத்த தலைமுறைக்கு தப்பான உதாரணம், இந்த படத்தில் சம்பந்தப்பட்டவங்க குடும்பத்துல இப்படி ஒரு விஷயம் நடந்தா நீங்க ஏத்துப்பீங்களாடான்னு கேட்கத்தோணுது என்று மோகன் ஜி விமர்சித்துள்ளார்.