இனி wine அந்த லிஸ்டில் இல்லையா.. மளிகை கடையில் கூட விற்கலாம்! அரசு அறிவிப்பு

Liquor Wine maharshtra
By Parthiban.A Jan 28, 2022 01:30 PM GMT
Report

நம் ஊரில் மதுபானங்கள் அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகள் மூலமாக மட்டுமே விற்கப்படுகின்றன. பண்டிகை காலங்களில் மது விற்பனை வசூல் சாதனை செய்வதையும் நாம் பார்த்து வருகிறோம். தமிழகத்தில் இப்படி என்றால் மற்ற மாநிலங்களில் மது விற்பனை தனியார் கடைகள் மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிராவில் தற்போது வரை அனுமதி வாங்கிய கடைகளில் மட்டுமே மதுபானங்கள் விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது வைன் மட்டும் இனி சூப்பர்மார்கெட் போன்ற சாதாரண கடைகளில் கூட விற்கலாம் என அரசு அறிவித்து உள்ளது.

இந்த அறிவிப்பு மதுபிரியர்கள் மட்டுமின்றி திராட்சை விவசாயிகளுக்கும் அதிகம் பயன் தரும் என அரசு தெரிவித்து உள்ளது. இதனால் வரும் காலத்தில் wine விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.