இரவு பார்ட்டியில் ஆண் நண்பருடன் யாஷிகா? இது நம்ம லிஸ்ட்ல இல்லயேப்பா!
மாடலிங் துறையில் இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த். துருவங்கள் பதினாறு படத்தில் அறிமுகமாகிய யாஷிகா இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமானார். அதன்பின் பிக்பாஸ் 2 சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களை ஈர்த்து வந்தார்.
சில படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகிய நிலையில் கடந்த ஆண்டு கார் விபத்தில் படுத்த படுக்கையாகினார். 4 மாதங்கள் சிகிச்சை பெற்றப்பின் உடல் நிலை சரியானபின் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில் நிரூப், பாலாஜி முருகதாஸ், உமாபதி ராமையா போன்றவர்களுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கினார். சமீபத்தில் கூட நிரூப்பை பார்க்க பிக்பாஸ் வீட்டிற்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு ஆண் நண்பர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட பார்ட்டி புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இதேபோன்று யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா தத்தாவுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்திற்கு யாஷிகா லவ் லவ் லவ் என்று கூறியதும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை வைத்து ரசிகர்கள் கண்டபடி கேள்வி கேட்டு வருகிறார்கள்.
