100 ரூபாய் காசுக்காக எல்லார் முன்னாடியும் டான்ஸ் ஆடியிருக்கேன்!! நடிகை யாஷிகா ஆனந்த் ஓபன் டாக்..
யாஷிகா ஆனந்த்
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார் யாஷிகா.

இதற்கிடையில் கார் விபத்தில் சிக்கி தன்னுடைய தோழியை இழந்து படுத்தப்படுகையில் இருந்தார். 4 மாதங்களுக்கு பின் மீண்டு வந்த யாஷிகா, மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் போட்டோஷூட்களை பகிர்ந்து வருகிறார்.
100 ரூபாய் காசுக்காக
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், 100 ரூபாய் பணத்திற்காக அனைவர் முன்பும் டான்ஸ் ஆடியிருக்கிறேன். எனக்கு பத்து வயதாக இருக்கும்போது 100 ரூபாய்க்காக, அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் முன்பு லூசுத்தனமாக டான்ஸ் ஆடுவேன். என் நடனத்தை பார்த்து ரசித்து, கை தட்டி எனக்கு 100 ரூபாய் தருவார்கள் என்று கூறியிருக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த்..