கண்ணீர்விட்டு கதறி அழும் நடிகை யாஷிகா! வீடியோவால் குழப்பத்தில் ரசிகர்கள்..
மாடலிங் துறையில் இருந்து சினிமாவில் அறிமுகமானவர்கள் வரிசையில் பலர் பிரபலமாகி வருகிறார்கள். அப்படி இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் திகில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியவர் நடிகை யாஷிகா ஆனந்த். கவலை வேண்டாம், படம், துருவங்கள் பதினாறு போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இருட்டு அறை முரட்டு குத்து படத்தில் எல்லைமீறிய காட்சிகளில் நடித்து பிரபலமாகிய யாஷிகா அதே ஆண்டு பிக்பாஸ் 2வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன்பின் நோட்டா, சோம்பி போன்ற படங்களில் நடித்தார்.
கடந்த ஆண்டு தோழி கொடுத்த பார்ட்டி முடித்து வீடு திரும்பியபோது கார் விபத்தாகி தோழி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். இதனால் படுகாயமடைந்த யாஷிகா 4 மாதகாலம் படுத்த படுக்கையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தற்போது உடல் நிலை சரியாகி மீண்டும் போட்டோஷூட், க்ளாமர் ரீல் என புகைப்படம் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சில படங்களில் நடித்தும் வந்த யாஷிகா கைவசம் பல படங்களில் நடிக்கவும் உள்ளார்.
இந்நிலையில், கண்ணீர் விட்டு அழும் படியான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். என்ன ஆச்சி என்று கேட்டபடி பதிவிட்ட இந்த வீடியோவை பார்த்து யாஷிகா நீங்களா இது என்று ஷாக்காகி வருகிறார்கள் ரசிகர்கள்.