அப்போ விஜய் தேவரகொண்டா, இப்போ இவரு.. கிரஷ்ஷை மாற்றிய யாஷிகா ஆனந்த்!

Yashika Aannand
By Parthiban.A Aug 12, 2022 07:15 PM GMT
Report

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் இருட்டு அறை படம் மூலமாக அறிமுகம் ஆனவர். அந்த அடல்ட் காமெடி படம் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.

அதன் பின் பிக் பாஸ், வெளியில் வந்ததும் சில படங்கள், கிளாமர் போட்டோஷூட் என அவர் இணையத்தில் பிரபலமான ஒருவராக தான் இருந்து வருகிறார். தற்போது அவர் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்து இருக்கும் கடமையைச் செய் படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது.

இந்நிலையில் யாஷிகா அளித்து இருக்கும் ஒரு பேட்டியில் அவரது கிரஷ் யார் என கேட்டதற்கு "ரோலக்ஸ்" என சூர்யாவை கூறி இருக்கிறார். முன்பு விஜய் தேவரக்கொண்டா என சொல்லி இருந்தீர்களே என கேட்டதற்கு, இப்போது கிருஷ் மாறிவிட்டது என கூறி இருக்கிறார் அவர்.

 அப்போ விஜய் தேவரகொண்டா, இப்போ இவரு.. கிரஷ்ஷை  மாற்றிய யாஷிகா ஆனந்த்! | Yashika Anand New Crush