விவாகரத்துக்கு பின் கோடிக்கணக்கில் புறளும் நடிகை சமந்தா.. ரிலீசாகாமலே இத்தனை கோடியில் பிசினஸ்..

Samantha
By Edward Nov 10, 2022 08:09 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா கடந்த மூன்று மாதகாலமாக அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு வருவதாக கூறியிருந்தார்.

கூடிய சீக்கிரம் அதிலிருந்து மீண்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார். விவாகரத்துக்கு பின் மாடலிங்கு பல படங்களில் நடித்து வரும் சமந்தா நடிப்பில் யசோதா படம் நாளை வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் வெளியாகவிருக்கும் யசோதா படம் ரிலீசாவதுற்கு முன்பே பல கோடிகளை வசூல் செய்துள்ளது.

அதாவது 53 கோடிகள் வரை பிசினஸ் செய்திருக்கிறது. படத்தின் டிஜிட்டல் உரிமை 24 கோடியும், சாட்டிலைட் உரிமை 13 கோடியும், இந்தி ரைட்ஸ் 3.5 கோடி, தியேட்டர் உரிமை 10 கோடி என 53 கோடி வரை பிசினஸ் செய்திருக்கிறது.

கதாநாயகியை மையப்படுத்தி வெளியாகவுள்ள யசோதா படத்தில் 5 கோடி வரை சமந்தா சம்பளமாக பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பல வருடங்களுக்கு பின் சமந்தா சோலோ ஹீரோயினாக யூ டெர்ன் படத்திற்கு பிறகு யசோதா தான் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Gallery